இந்திய மற்றும் இலங்கை ஊடகங்களில் பயன்படுத்தப்படும் வேறுபட்ட கலைச்சொற்கள்.
எண் | ஆங்கிலச் சொல் | இந்திய வழக்கு | இலங்கை வழக்கு |
---|
1 | ambassador | தூதர் | தூதுவர் |
2 | appartment | அடுக்கு மாடி | தொடர்மாடி |
3 | applicant | விண்ணப்பதாரர் | விண்ணப்பதாரி |
4 | argument | வாய்த்தகராறு | வாய்த்தர்க்கம் |
5 | attorney | வழக்குரைஞர் | சட்டத்தரணி |
6 | auditor | தணிக்கையாளர் | கணக்காய்வாளர் |
7 | auto | ஆட்டோ | ஓட்டோ |
8 | bankrupt | திவால் | வங்குரோத்து |
9 | bicycle | மிதிவண்டி | துவிச்சக்கரவண்டி |
10 | bid | ஒப்பந்தப்புள்ளி | விலைமனு |
11 | brand | பிராண்ட் | வர்த்தகநாமம் |
12 | busstand | பேருந்து நிறுத்தம் | பஸ்தரிப்பு |
13 | canteen | கேண்டீன்/உணவகம் | சிற்றுண்டிச்சாலை |
14 | chair | நாற்காலி | கதிரை |
15 | chief justice | தலைமை நீதிபதி | பிரதம நீதியரசர் |
16 | chocolate | சாக்லெட் | சொக்லெட் |
17 | circular | சுற்றறிக்கை | சுற்றுநிருபம் |
18 | citizenship | குடியுரிமை | பிரஜாவுரிமை |
19 | coffee | காப்பி | கோப்பி |
20 | come inperson | நேரில் வர | சமூகமளிக்க |
21 | commissioner general | தலைமை ஆணையாளர் | ஆணையாளர் நாயகம் |
22 | complainee | புகார்தாரர் | முறைப்பாட்டாளர் |
23 | complaint | புகார் | முறைப்பாடு |
24 | conduct (v) | நடத்தல் | நடாத்தல் |
25 | congratulatory address | வாழ்த்துரை | ஆசிச்செய்தி |
26 | consumer | பயனீட்டாளர் | பாவனையாளர் |
27 | corporation | கார்பரேசன்/நிறுவனம் | கூட்டுத்தாபனம் |
28 | course | படிப்பு/வகுப்பு | கற்கை நெறி |
29 | court | நீதிமன்றம் | நீதிமன்று |
30 | craftsmen | கைவினைக் கலைஞர் | கைப்பணியாளர் |
31 | cricket | கிரிக்கெட் | துடுப்பாட்டம் |
32 | curriculum | பாடத்திட்டம் | பாடவிதானம் |
33 | cutoff mark | கட் ஆப் மதிப்பெண் | வெட்டுப்புள்ளி |
34 | date | தேதி | திகதி |
35 | december | டிசம்பர் | டிசெம்பர் |
36 | defence zone | பாதுகாப்பு மண்டலம் | பாதுகாப்பு வலயம் |
37 | department | துறை | திணைக்களம் |
38 | deposit | டெபாசிட் தொகை | கட்டுப்பணம் |
39 | deputy minister | துணையமைச்சர் | பிரதியமைச்சர் |
40 | development | வளர்ச்சி | அபிவிருத்தி |
41 | director of education | கல்வித்துறை இயக்குநர் | கல்விப்பணிப்பாளர் |
42 | disaster | பேரிடர் | அனர்த்தம் |
43 | doctor | மருத்துவர்/டாக்டர் | வைத்தியர்/டொக்டர் |
44 | doctorate | முனைவர் | கலாநிதி |
45 | dollar | டாலர் | டொலர் |
46 | donor | உபயதாரர் | உபயகாரர் |
47 | driver | ஓட்டுநர் | சாரதி |
48 | driver licence | ஓட்டுநர் உரிமம் | சாரதி அனுமதிப்பத்திரம் |
49 | drug | போதைப்பொருள் | போதைவஸ்து |
50 | election manifesto | தேர்தல் அறிக்கை | தேர்தல் விஞ்ஞாபனம் |
51 | embassy | தூதரகம் | தூதுவராலயம் |
52 | exam centre | தேர்வு நிலையம் | பரீட்சை நிலையம் |
53 | exam duty | தேர்வுப் பணி | பரீட்சைக்கடமை |
54 | exam result | தேர்வு முடிவு | பரீட்சை பெறுபேறு |
55 | examinee | தேர்வர் | பரீட்சாத்தி |
56 | explain (v) | விவரிக்க | விபரிக்க |
57 | express train | விரைவு ரயில் | கடுகதி புகையிரதம் |
58 | financial crime | பொருளாதாரக் குற்றம் | நிதிக் குற்றம் |
59 | fine | அபராதம் | குற்றப்பணம் |
60 | flood disaster | வெள்ளச் சேதம் | வெள்ள அனர்த்தம் |
61 | foorwear | காலணி | பாதணி |
62 | forest department | வனத்துறை | வனபரிபாலன திணைக்களம் |
63 | funeral | இறுதிச்சடங்கு | இறுதிக்கிரியை |
64 | funeral | இறுதிச் சடங்கு | மரணச் சடங்கு |
65 | furniture | தளவாடம் | தளபாடம் |
66 | geology | நிலவியல் | புவிச்சரிதவியல் |
67 | godown | கிடங்கு | களஞ்சியசாலை |
68 | government | அரசு | இராஜாங்கம் |
69 | government gazette | அரசிதழ் | அரசாங்க வர்த்தமானி |
70 | groundnut | வேர்க்கடலை | கச்சான் |
71 | handicap | ஊனமுற்றோர் | அங்கவீனமுற்றோர் |
72 | handicraft | கைவினை | கைப்பணி |
73 | handover | ஒப்படைப்பு | கையளிப்பு |
74 | head office | தலைமை அலுவலகம் | தலைமைக் காரியாலயம் |
75 | health issue | உடல்நலப் பாதிப்பு | சுகவீனம் |
76 | highcourt | உயர்நீதிமன்றம் | உயர்நீதிமன்று |
77 | hospital | மருத்துவமனை | வைத்தியசாலை |
78 | hour | மணிநேரம் | மணித்தியாலம் |
79 | intellectual property | அறிவுசார் சொத்து | புலமைச் சொத்து |
80 | jewellery | நகைக்கடை | நகையகம் |
81 | jurisdiction | அதிகார எல்லை | நியாயாதிக்கம் |
82 | kitchen | சமையலறை | குசினி |
83 | land owner | நில உரிமையாளர் | காணியாளர் |
84 | landslide | நிலச்சரிவு | தாழிறக்கம் |
85 | lecturer | விரிவுரையாளர் | போதனாசிரியர் |
86 | levy | வரிவிதிப்பு | அறவீடு |
87 | lighthouse | கலங்கரை விளக்கு | வெளிச்சவீடு |
88 | liquor shop | மதுக்கடை | மதுபான சாலை |
89 | livelihood | வாழ்வாதாரம் | ஜீவனோபாயம் |
90 | lorry | லாரி/சுமையுந்து | லொரி/பாரவூர்தி |
91 | lottery | லாட்டரி | லொத்தர் |
92 | magistrates court | நடுவர் நீதிமன்றம் | நீதிவான் நீதிமன்றம் |
93 | man of the match | ஆட்டநாயகன் | சிறப்பாட்டக்காரர் |
94 | management | மேலாண்மை / நிர்வாகம் | முகாமைத்துவம் |
95 | Managing Director | நிர்வாக இயக்குநர் | முகாமைத்துவப் பணிப்பாளர் |
96 | medical officer | மருத்துவ அலுவலர் | வைத்தியதிகாரி |
97 | meter | மீட்டர் | மீற்றர் |
98 | milk powder | பால் பவுடர் | பால் மா |
99 | ministry | அமைச்சகம் | அமைச்சு |
100 | monthly | மாதந்தோறும் | மாதாந்தம் |
101 | mosquito | கொசு | நுளம்பு |
102 | motor | மோட்டார் | மோட்டர் |
103 | nurse | செவிலியர் | தாதியர் |
104 | observation | கவனிப்பு | அவதானிப்பு |
105 | observe (v) | கவனிக்க | அவதானித்த |
106 | october | அக்டோபர் | ஒக்டோபர் |
107 | office | அலுவலகம் | காரியாலயம் |
108 | official languges | அலுவல் மொழிகள் | அரசகரும மொழிகள் |
109 | online | ஆன்லைன் | ஓன்லைன் |
110 | organic fertilizer | இயற்கை உரம் | சேதன உரம் |
111 | outpatient | வெளிநோயாளி | வெளிநோயாளர் |
112 | overturn (v) | கவிழ்ந்த | குடைசாய்ந்த |
113 | parliament | நாடாளுமன்றம் | நாடாளுமன்று |
114 | parliament | பாராளுமன்றம் | பாராளுமன்று |
115 | participate (v) | பங்கேற்றல் | பங்குபற்றல் |
116 | pass (v) | தேர்ச்சி பெற்ற | சித்தியடைந்த |
117 | patient | நோயாளி | நோயாளர் |
118 | penalty | அபராதம் | உபாதையீடு |
119 | personnel | ஆளிநர் | ஆளணி |
120 | petroleum | பெட்ரோலிய | பெற்றோலிய |
121 | pharmaceutical drug | மருந்து | மருத்துவ ஔடதம் |
122 | phone directory | தொலைபேசி கையேடு | தொலைபேசி விபரக்கொத்து |
123 | planetarium | கோளரங்கம் | கோள்மண்டலம் |
124 | police | போலீஸார்/காவல்துறை | பொலிஸார்/காவற்றுறை |
125 | pope | போப்பாண்டவர் | பாப்பரசர் |
126 | population | மக்கள்தொகை | குடித்தொகை |
127 | prepaid | ப்ரீபெய்ட் | முற்கொடுப்பனவு |
128 | present (v) | உடனிருந்த/கலந்துகொண்ட | பிரசன்னமாகியிருந்த |
129 | priest | பூசாரி | பூசகர் |
130 | qualifier match | தகுதிச்சுற்றுப் போட்டி | தகுதிகாண் போட்டி |
131 | question paper | வினாத்தாள் | வினாப்பத்திரம் |
132 | railway crossing | ரயில்வே கிராசிங்/ ரயில்வே கடவுப்பாதை | புகையிரத கடவை |
133 | rainfall | மழைப்பொழிவு | மழைவீழ்ச்சி |
134 | related person | தொடர்புடையவர் | தொடர்புபட்டவர் |
135 | remand | விசாரணை | விளக்கமறியல் |
136 | role | பங்கு | வகிபாகம் |
137 | scholarship | உதவித் தொகை | புலமைப்பரிசில் |
138 | school | பள்ளி | பாடசாலை |
139 | seminary | குருத்துவக் கல்லூரி | குருமடம் |
140 | serve (v) | பணியாற்ற | கடமையாற்ற |
141 | shame | அவப்பெயர் | அபகீர்த்தி |
142 | signature | கையெழுத்து | கைச்சாத்து |
143 | soap | சோப் | சவர்க்காரம் |
144 | spokesman | செய்தித் தொடர்பாளர் | ஊடகப் பேச்சாளர் |
145 | sponsor | புரவலர் | அனுசரணையாளர் |
146 | statement | வாக்குமூல அறிக்கை | வாய்மூல அறிக்கை |
147 | strike | வேலைநிறுத்தம் | பணிப்பகிஷ்கரிப்பு |
148 | surgery | அறுவைசிகிச்சை | சத்திரசிகிச்சை |
149 | swallow poison (v) | விசம்குடித்த | நஞ்சருந்திய |
150 | take in charge(v) | பதவியேற்ற | கடமையேற்ற |
151 | tea stall | டீக்கடை | தேநீர்ச்சாலை |
152 | tourist | சுற்றுலாப் பயணி | சுற்றுலாப்பிரயாணி |
153 | train | தொடர்வண்டி | புகையிரதம் |
154 | transport board | போக்குவரத்து வாரியம் | போக்குவரத்துச்சபை |
155 | usage | பயன்பாடு | பாவனை |
156 | use (v) | பயன்படுத்த | பாவிக்க |
157 | VAT | வாட்வரி | வற்வரி |
158 | venerable | வணங்குதற்குரிய | சங்கைக்குரிய |
159 | veteran mediaperson | மூத்த ஊடகவியலாளர் | சிரேஷ்ட ஊடகவியலாளர் |
160 | vice chancellor | இணைவேந்தர் | உபவேந்தர் |
161 | vision | தொலைநோக்கு | தூரநோக்கு |
162 | visit | வருகை | விஜயம் |
163 | wage | கூலி | வேதனம் |
164 | water stoppage | குடிநீர் நிறுத்தம் | நீர்வெட்டு |
165 | water tank | தண்ணீர் தொட்டி | நீர்த்தாங்கி |
166 | weekly | வாரந்தோறும் | வாராந்திரம் |
167 | welfare scheme | நலத் திட்டம் | நலன்புரி திட்டம் |