உதவிப் பக்கம்
பயன்படுத்தும் முறை
பிழைதிருத்தி:
முழு நூலையோ பெரிய கட்டுரையையே இட்டு, ஒவ்வொன்றாகத் திருத்திக் கொள்ளும் வகையில் உள்ளது. வார்த்தை வரம்புகள் இல்லை. உலாவியின் வேகத்திற்கு ஏற்ப சுமார் பத்தாயிரம் சொற்களைச் சராசரியாகத் திருத்தலாம். பிழைதிருத்துநர்/நூலாசிரியர்க்கு ஏற்ற இடைமுகம்.
சொல்லாளர்:
ஒரு சொல்லாளருக்கு இணையான வசதிகளுடன் உள்ளடக்கத்தை அழகூட்டவும் மேம்படுத்தவும் முடியும். வடிவமைப்பாளருக்கு ஏற்ற இடைமுகம்
சிறுதிருத்தி:
இதில் தட்டச்சும் போதே பக்கவாட்டில் பரிந்துரைகளைக் கண்டு திருத்திக் கொள்ள முடியும். புதியதாக எழுத விரும்புபவர்களுக்குச் சரியான இடைமுகம். எழுத்தாளர்/ஊடகத்தினர்க்கு ஏற்ற இடைமுகம்
பிழையறிக்கை:
ஒரு முழு கோப்பினை உள்ளீடு செய்து பிழைகளைப் பட்டியலிடச் செய்யலாம். ஒரு கோப்பினை மதிப்பீடு செய்ய உதவும். பதிப்பாளர்க்கு ஏற்ற இடைமுகம்
பொதுவான அமைப்பு:
"தானி" (auto correction) என்ற தேர்வுப் பொத்தான் மூலம் இக்கருவி தானாகப் பிழைகளைத் திருத்த வேண்டுமா அல்லது சுட்டிக் காட்டினால் போதுமா என்று கட்டுப்படுத்தலாம்.
"திருத்து" (spellcheck) என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் திருத்த ஆரம்பிக்கலாம்.
"தவிர்" (clear format) என்ற பொத்தான் மூலம் அடையாள வடிவங்களை நீக்கிக்கொள்ளலாம்.
"அழி" (clear content) என்ற பொத்தான் முழுவதையும் அழித்து, புதிய பயன்பாட்டிற்குத் தயார்ப்படுத்தும்.
ஒரு சொல் கருவியின் சொற்பட்டியலில் இல்லை (பிழையான சொல்லாகவும் இருக்கலாம்.) என்றால் மூன்று வித வடிவங்களில் சொற்களைச் சுட்டிக்காட்டும்.
அடிக்கோடு என்றால் அதற்கான பரிந்துரைகள் ஏதுமில்லை என்று பொருள்.
சிவப்பெழுத்து என்றால் இணையான பல பரிந்துரைகள் உள்ளன என்று பொருள்
பச்சையெழுத்து என்றால் தானாகத் திருத்தப்பட்ட சொல் என்று பொருள். சுயதிருத்தம் தேர்வு செய்தால் மட்டுமே இது நிகழும்.
அத்தகைய சொற்களுக்கு மேல் சுட்டியைக் கொண்டுவந்தால் புதிய படிவம் ஒன்று காட்டப்படும். அதில் உள்ள பரிந்துரைகளைத் தேர்வு செய்யலாம். அல்லது அச்சொல் சரியென்றால் பயனர் கொடுத்த சொல்லைத் தேர்வு செய்யலாம். அல்லது எழுத்துப்பெட்டியில் பயனர் விரும்பும் புதுச் சொல்லை எழுதி மாற்றிக்கொள்ளலாம். "மாற்று" என்பது ஒருசொல்லை மாற்றும், "மாற்று(எ)" என்பது எல்லாச் சொற்களையும் மாற்றும். மேற்கண்ட வடிவச் சொற்களை மாற்றியோ, பரிந்துரையைத் தேர்வு செய்தோ உங்கள் படைப்புகளில் பிழை நீக்கிக் கொள்ளலாம்.
இதன் சிறப்பம்சம்
எளிதாகப் பயன்படுத்தக்கூடிய WYSIWYG வடிவ இடைமுகமும், கையடக்கக் கருவி ஒத்திசைவும் கொண்டு வெளிவந்துள்ளது. WYSIWYG வடிவமில்லாத பழைய இடைமுகத்தைப் பயன்படுத்த
இப்பக்கம் செல்லவும்
தற்கால தமிழ்நடைக்கு ஏற்ப பெருந்தரவு கொண்டு பிழைகளை நீக்கி, பரிந்துரைகளை வழங்கும். புழக்கத்திலுள்ள தனிப் பெயர்ச்சொல்(ஊர்ப் பெயர், நபர்) பலவற்றை இத்திருத்தி புரிந்து கொள்ளும்.
வேற்றுமை உருபு மற்றும் இலக்கணம் கொண்டு 70% சந்திப்பிழைகளையும் அறிந்து இது பரிந்துரைக்கும்.
சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைக்கும்.
கூகிள் குரோம், கூகிள் டாக்ஸ் போன்ற இடங்களில் நேரடியாக வாணியைப் பயன்படுத்த முடியும்.
குரோம் நீட்டிப்பு நிறுவல்:
- சுயவிவரம் பக்கம் சென்று ஏபிஐ கீ என்னும் குறிகளை நகல் எடுத்துக் கொள்க. (புதியவர் என்றால் பதிவு செய்து கொள்க)
- குரோம் அங்காடி சென்று இந்த நீட்டிப்பை நிறுவிக் கொள்ளுங்கள்
- பின்னர் உலாவியின் செயல் பட்டையில் உள்ள வாணி படவுருவை அழுத்தினால் புதிய திரை காட்டும்.
- அதில் நகலெடுத்த ஏபிஐ கீயை இட்டு, "செயல்படுத்து" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
- வேண்டிய விருப்பத்தை கீழே உள்ள தெரிவுப் பெட்டியில் இடலாம்.
- பயன்பாடு:
- உலாவியில் தட்டச்சு செய்யும் பெட்டியில், அனைத்துச் சொற்களையும் தேர்வு செய்து வலது சொடுக்கு செய்யுங்கள்
- காட்டப்படும் பொத்தான்களில் "மொழிக் கருவி" -> "பிழை சோதனை" என்று தேர்வுசெய்தால் பிழை சோதனை செய்து பரிந்துரையைக் கொடுக்கும்.
நேரடியாகத் திருத்தாது. வேண்டிய திருத்தத்தைப் பயனர்களே செய்து கொள்ளலாம்.
- "மொழிக் கருவி" -> "அகராதி தேடல்" என்று தேர்வு செய்து ஏதேனும் ஒரு சொல்லுக்கு அகராதி விளக்கத்தைப் பெறலாம்
- "மொழிக் கருவி" -> "சொல் ஆய்வு" என்று தேர்வு செய்தால் சுளகு கருவியில் ஆய்வுசெய்ய உதவும்
- குறிப்புகள்:
s
- உலாவியில் தேவையில்லை என்றால் "முடக்கு" என்று நிறுத்திக் கொள்ளலாம்.
- உறுப்பினர் கணக்கு காலாவதியாகாமல் இருக்க வேண்டும் ஏபிஐ கீ
உறுப்பினர் பதிவு
உறுப்பினராகப் பதிவு செய்பவர்களுக்கு மூன்றுவித இடைமுகங்களுடன் பயன்படுத்தமுடியும்.
இலவசப் பதிப்பைப் பயன்படுத்த
இங்கே செல்லலாம்.
சந்தா செலுத்தும் முறை
உறுப்பினராக உள் நுழைந்து,
இப்பக்கத்திற்குச் செல்க.
இங்கே தேவையான சந்தாத் திட்டத்தைத் தேர்வு செய்து, தொடர்பு எண்ணை அளித்து, checkout செய்து கொள்ள வேண்டும்.