வழக்குகள் | அடுக்குத்தொடர் | இரட்டைக்கிளவி | ஒலிக்குறிப்புகள்


தற்கால வழக்கிலுள்ள இரட்டைக்கிளவி சொற்களின் பட்டியல்:
எண்இரட்டைக்கிளவிஉதாரணம்
1கசகசகசகச என வியர்த்தது
2கடகடகடகட என சிரித்தான்
3கடுகடுசிலர் எப்போதும் கடுகடுவென இருப்பார்கள்
4கடுகடுத்தஎன் பேச்சைக் கேட்டதும் அவர் முகம் கடுகடுத்தது.
5கணகணமணிகள் கணகணவென ஒலிக்க
6கணீர் கணீர்வெண்கல குரலில் கணீர் கணீர் எனப் பாடினார்
7கதகதஅது கதகதவென கொதித்தது
8கபகபகபகப என பசிக்க ஆரம்பித்தது
9கமகமகமகம என மணந்தது முல்லை
10கரகரகரகரவெனக் கழுத்தை அறுத்தார்
11கரகரத்தகரகரத்த குரலில் பேசினான்
12கருகருஅவன் தலைமுடி கருகருவென இருந்தது
13கலகலகலகலவெனச் சிரித்தாள்
14கலகலத்தகலகலப்பான பேச்சு
15கறகறமின்விசிறிகள் கறகற என சுழன்றன
16கிசுகிசுகிசுகிசு ஒன்றைக் கேட்டேன்
17கிச்சுகிச்சுகிச்சுகிச்சு மூட்டினாள் பேத்தி
18கிடுகிடுகிடுகிடு பள்ளம் பார்த்தேன்
19கிளுகிளுகிளுகிளு படம் பார்த்தாராம்
அவள் கிளுகிளுவென சிரித்து
20கிறுகிறுகிறுகிறு என்று தலை சுற்றியது
21கீச்சுகீச்சுகீச்சுகீச்சு என குருவிகள் கத்தின
22குசுகுசுகுறைந்த ஓசையில் குசுகுசுவென பேசிக்கொண்டே இருந்தார்கள்
23குடுகுடுகுடுகுடு கிழவர் வந்தார்
24குபுகுபுகுபுகுபு என குருதி கொட்டியது
25குளுகுளுகுளுகுளுவென உதகை இருந்தது
26குறுகுறுகுறுகுறுத்தது குற்ற நெஞ்சம்
27கொழகொழகொழகொழ என்று ஆனது சோறு
28கொழுகொழுகொழுகொழு என்று குட்டி
29சடசடசடசடவென கிளை முறிந்தது
30சதசதசதசத என்ற சேற்றில் விழுந்தேன்
31சரசரசரசர என்று மான்கள் ஓடின
32சலசலபனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது
33சவசவசவசவ என்று முகம் சிவந்தது
34சாரைசாரைசாரைசாரையாக மக்கள் வந்தனர்
35சிடுசிடுசிடுசிடுவென முகத்தைக் கோபத்தோடு வைத்திருந்தார்.
36சிலுசிலுசிலுசிலு எனக் காற்று வீசியது
37சுறுசுறுசுறுசுறுவெனக் கோபமாக பேசினார்
38சொதசொதசொதசொதவென மழையில் நனைந்து விட்டார்
39சொரசொரசொரசொரப்பான தாடி
40டாங்டாங்டாங் டாங்கென மணி ஒலித்தது
41தகதகதகதக மின்னும் மேனி
42தடதடதடதட என் கதவைத் தட்டினான்
43தடதடதடதடவென இழுத்துச் சென்றார்
44தரதரதரதர என்று இழுத்து சென்றான்
45தழுதழுத்ததழுதழுத்த குரலில் பேசினார்
46தளதளதளதள என்று ததும்பும் பருவம்
47திக்குத்திக்குதிக்குத்திக்கு என் நெஞ்சம் துடிக்கும்
48திடுதிடுதிடுதிடு என நுழைந்தான்
49திடுதிடுப்கார்களில் திடுதிடுப்பென மர்ம கும்பல் ஒன்று வந்தது.
50திபுதிபுதிபுதிபு என மக்கள் புகுந்தனர்
51திருதிருதிருதிரு என விழித்தான்
52துடிதுடித்தல்சோகச் செய்தி கேட்டுத் துடிதுடித்துப் போனோம்
53துருதுருதுரு துருவென ஏதாவது செய்து கொண்டிருப்பாள்
54துறுதுறுதுறுதுறு என்ற விழிகள்
55தைதைதைதை என்று ஆடினாள்
56தொணதொணதொணதொணவெனப் பேசாமல் இருங்கள்
57தொபுதொபுதொபுதொபுவென்று மழை வெள்ளம் கொட்டியது
58தொளதொளதொள தொள என சட்டை அணிந்தார்
59நங்குநங்குநங்குநங்கு எனக் குத்தினான்
60நசநசஎங்கே பார்த்தாலும் நசநச என்று ஈரம்
61நணுகுநணுகுநணுகுநணுகு எனும் அளவில் அச்சம் மேலிட (இலக்கியம்)
62நமநமதொண்டை நமநமவென சளி பிடிப்பது போலிருக்கிறது
63நறநறநறநற என பல்லைக் கடித்தான்
64நறு நறுஆத்திரத்துடன் பற்களை நறுநறுவென்று கடித்தாள்
65நெடுநெடுஅவள் நெடுநெடுவென வளர்ந்து விட்டாள்
66நெருநெருஅரிசியை சற்று நெருநெருவென்று அரைக்கவும்
67நைநைநைநை என்று அழுதாள்
68நொகுநொகுநொகுநொகு (நெகுநெகு) என்று மாவை அரைத்தாள்
69பகபகவாய் விட்டு பகபகவென சிரித்தான்
70பக்குப்பக்குபக்குப்பக்கு என்று நெஞ்சு அடிக்கும்
71படபடகண்ணகி படபடவெனப் பேசிச் சிரித்தான்
72படபடத்தபாம்பைப் பார்த்ததும் நெஞ்சம் படபடத்தது
73பதைபதைத்தகைக்குழந்தைகளுடன் பதைபதைத்த பாட்டி
74பரபரபரபரப்பு அடைந்தது ஊர்
75பரபரப்பு-
76பளபளபளபள என்று பாறை மின்னியது
77பளபளத்தகண்ணாடிபோல் பளபளத்த தரையில்
78பளார் பளார்பளார் பளாரென கன்னத்தில் அறைந்தார்
79பளிச்பளிச்செனப் பதில் சொன்னார்
80பளிச்பளிச்-
81பளீர்-
82பிசுபிசுஎண்ணெய் பிசுபிசுவென இருந்தது
83பிசுபிசுத்தபிசுபிசுத்தது போராட்டம்
84புசுபுசுஇட்லி புசுபுசுவென கிடைக்கும்
85பொசுபொசு-
86பொதபொதபொதபொத பன்றியின் வயிறு
87பொலபொலபொலபொல என வடித்தாள் கண்ணீர்
88மங்குமங்குமங்குமங்கு (மாங்கு மாங்கு) என்று வேலை செய்தால் போதுமா?
89மசமசமசமச என்று நிற்கவில்லை
90மடக்கு மடக்குமடக்கு மடக்கு எனவும் குடித்தார்
91மடமடமரம் மடமட என முறிந்தது
மடமட என நீரைக் குடித்தார்
92மலங்க மலங்கமலங்க மலங்க விழித்தான்
93மளமளமள மள என எல்லாம் நிகழ்ந்தது; மளமளவெனப் பற்றி எரிந்ததீ
94மாங்குமாங்குமாங்குமாங்கு என்று உழைப்பார்
95மினுகு மினுகுமினுகு மினுகு என்று செழிப்புற்றிருந்த மேனி (இலக்கியம்)
96மினுமினு-
97முணுமுணுத்தமனதிற்குள் முணுமுணுத்தார்
98மூசுமூசு-
99மெது மெது-
100மொசுமொசுமொசுமொசு என மயிர்
101மொச்சுமொச்சுமொச்சுமொச்சு என்று தின்றார் பாட்டன்
102மொடமொட-
103மொர மொர-
104மொலுமொலுமொலு மொலென்று அரிக்கிறது சிரங்கு
105மொழுமொழுமொழுமொழு என்று தலை வழுக்கை.
106மொறமொற-
107மொறுமொறுமொறுமொறு என்று சுட்டாள் முறுக்கு
108லபக்கு லபக்குலபக்கு லபக்கென்று முழுங்கினார்
109லபலபலபலப என்று அடித்துக் கொண்டாள்
110லபோலபோலபோலபோ என அடித்துக் கொண்டாள்
111லொடலொடலொடலொட என்றும் பேசுவாள்
112வடவடவடவட என வேர்த்தன கைகள்
113வதவதவதவத என ஈன்றன குட்டிகள்
114வழவழவழவழ என்று பேசினாள் கிழவி
115வளுவளு-
116விக்கி விக்கிவிக்கி விக்கி அழுதது குழந்தை
117விசுக் விசுக்பெண் ஒருவர் விசுக் விசுக்கென்று நடக்கிறார்
118விசுவிசுவிசுவிசு என்று குளிர் அடித்தது
119விடுவிடு-
120விண் விண்ஒரே பக்கமாக தலை விண்விண்ணென்று தெறிக்கும்
121விதிர்விதிர்-
122விறுவிறுவிறுவிறுப்பான கதையாம்
123வெடவெடவெடவெட என நடுங்கியது உடல்
124வெடுவெடுவெடுவெடு என நடுங்கினாள்
125வெதுவெதுவெதுவெதுப்பான நீரில் குளித்தாள்
126வெலவெலவெலவெல என்று நடுங்கினேன்.
127ஜிகுஜிகுஜிகு ஜிகு உடையில் நாட்டியம் ஆடினார்Powered by MediaWiki
Contact Us      Terms & Conditions