எண் | ஒலிக்குறிப்பு | உதாரணம் |
---|
1 | உம் | உம்மென உட்கார்ந்திருந்தாள் |
2 | ஓ | ஓவென அழுதுவிட்டார் |
3 | கப்சிப் | கப்சிப்பென அனைவரும் அமைதியாக இருந்தனர் |
4 | குபீர் | குபீரென சிரித்தார் |
5 | குப் | குப்பென வியர்த்துவிட்டது |
6 | கும் | கும்மென இருட்டில் சென்றார். உடம்பைக் கும்மென வைத்திருக்கிறார் |
7 | சடார் | சடாரென காலில் விழுந்த மாணவர் |
8 | சட் | சட்டென மாறிய வானிலை |
9 | சரேல் | சரேலென மின்னல் வெளிச்சம் பாய்வது |
10 | சளார் | தண்ணீரில் சளாரென விழுந்தேன் |
11 | சிக் | உடல் எடையை சிக்கென்று குறைத்தார் |
12 | சில் | சில்லென ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் |
13 | சுரீர் | அடிவயிற்றில் சுரீரென வலிக்க ஆரம்பித்தது |
14 | சுர் | சுர்ரென மிளகாய்க் காரமாக இருந்தது |
15 | திக் | முகத்தைப் பார்த்தது திக்கென இருந்தது |
16 | திடீர் | திடீரென மழை பொழிந்தது |
17 | திடுதிப் | திடுதிப்பெனக் காலையில் வந்து நின்றார். |
18 | தொப் | தொப்பெனக் குளத்தில் விழ்ந்தார் |
19 | பகீர் | அந்தச் செய்தி பகீரென இருந்தது |
20 | பசேர் | பச்சை பசேரென தென்னை மரங்கள் |
21 | படக் | படக்கென காலில் விழுந்த மூதாட்டி |
22 | பளார் | பளாரென்று கன்னத்தில் அறைந்தார் |
23 | பொத் | பொத்தெனக் கீழே விழுந்தார் |
24 | மெத் | மெத்து மெத்தென இருக்கும் இந்த கரடி பொம்மை |
25 | விருட் | விருட்டென கிளம்பிச் சென்றார் |
26 | சோ | மழை சோவென பெய்து |
27 | மடக் | தண்ணீரை எடுத்து மடக்கென குடித்தாள் |
28 | உஷ் | உஷ்..யாரும் பேசாதீங்க |
29 | அடடா | அடடா இது தெரியாமல் போனதே |
30 | ஆகா | ஆகா! அருமை |
31 | ஆராரோ | ஆராரோ ஆரிராரோ |
32 | சீ | சீ..சீ இந்தப் பழம் புளிக்கும் |
33 | ஏய் | ஏய்.. உனக்கு அறிவில்லையா? |
34 | கோ | கோவென கதறி அழுதாள் |
35 | டக் | டக்கென கிளம்பினார் |
36 | டமால் | கதவை டமாலென மூடுகிறார் |
37 | டமார் | டமாரென இடி சத்தம் முழங்கும் |
38 | சேச்சே | சேச்சே, அவரிடம் பேசுவதில்லை |
39 | நச் | நச்சென்று பதிலடி கொடுத்தார் |
40 | அச்சச்சோ | அச்சச்சோ பாவம் |
41 | ஜம் | கல்யாணத்தில் மாப்பிளை ஜம்மென உட்கார்ந்திருந்தார் |
42 | டம் | வாகனமொன்று மரத்தில் டம்மென்று மோதியது |