எண் | அடுக்குத்தொடர் | உதாரணம் |
---|
1 | அடியடி | மாணவரை ஆசிரியர் அடியடியென அடித்தார் |
2 | அடுக்கடுக்கு | அடுக்கடுக்கானப் புகார்கள் குவிழ்ந்தன |
3 | அணியணி | அணியணியாகப் படைகள் சூழ்ந்தன |
4 | அணுவணு | அவரைப் அணுவணுவாக இவருக்குத் தெரியும் |
5 | அதிகமதிகம் | அதிகமதிகமாகப் பேராசை ஏற்படும் |
6 | அலையலை | அலையலையாக மக்கள் கூட்டத்திற்கு வந்தனர் |
7 | அழுகை அழுகையாக | கதை கேட்கும் போது அழுகை அழுகையாக வந்தது |
8 | அளந்து அளந்து | அவனோடு அளந்து அளந்து தான் பேசினாள் |
9 | ஆசையாசை | ஆசையாசையாகக் கட்டிய வீடு |
10 | ஆயிரமாயிரம் | ஆயிரமாயிரம் காலமாக நிலைத்து நிற்கும் கோபுரம் |
11 | இங்குமங்கும் | இங்குமங்கும் அலைந்து கொண்டு இருக்காதீர்கள் |
12 | இரண்டிரண்டு | வெண்பா என்பது இரண்டிரண்டு அடியாக இருக்கும் |
13 | இல்லையில்லை | இல்லையில்லை அவன் சொல்வது பொய் |
14 | இழையிழை | திராட்சைகள் இழையிழையாய்த் தொங்குகின்றன |
15 | எதிரெதிர் | வாகனங்கள் இரண்டும் எதிரெதிரே மோதிக்கொண்டன |
16 | ஏறியேறி | உயரிய கம்பத்தில் ஏறியேறி உயரே செல்கிறார். |
17 | ஓடி ஓடி | ஓடி ஓடி ஓடாய் தேய்ந்த மனிதர் |
18 | கடைகடை | கடைகடையாக ஏறி இறங்கித் துணி எடுத்தோம் |
19 | கட்டங்கட்டம் | பள்ளிகள் மீண்டும் கட்டங்கட்டமாகத் திறக்கப்படும் |
20 | கட்டுக்கட்டு | கட்டுக்கட்டாகப் பணம் கிடைத்தது |
21 | கதறிக்கதறி | கதறிக்கதறி அழுதார் |
22 | கதைகதை | இரவெல்லாம் கதை கதையாகப் பேசினார் |
23 | காலகாலம் | காலகாலமாக நடந்து வரும் பழக்கம் |
24 | காலங்காலம் | காலங்காலத்தில் ஒரு கல்யாணம் பண்ண வேண்டும் |
25 | காலம்காலம் | காலம்காலமாக நடந்து வரும் பழக்கம் |
26 | கீழே கீழே | இன்னும் கீழேகீழே சென்றால் தண்ணீர் கிடைக்கும் |
27 | குடும்பங்குடும்பம் | குடும்பங் குடும்பமாக நிகழ்வில் கலந்து கொண்டனர் |
28 | குமுறிக் குமுறி | குமுறிக் குமுறி அழுதார் |
29 | கும்பல்கும்பல் | கும்பல் கும்பலாக நடந்து சென்றனர் |
30 | குலுங்கிக் குலுங்கி | குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்தார் |
31 | குலைகுலையாக | காய்கள் குலை குலையாக காய்த்து தொங்குகின்றன |
32 | குவியல் குவியல் | குப்பையைக் குவியல் குவியலாகக் குவித்துள்ளனர் |
33 | குழுக்குழு | - |
34 | கூடிக் கூடி | கூடிக் கூடி ரகசியமாகப் பேசினார் |
35 | கூட்டங்கூட்டம் | - |
36 | கூட்டம்கூட்டம் | - |
37 | கொஞ்சங்கொஞ்சம் | - |
38 | கொட்டுகொட்டு | கொட்டு கொட்டென மழை கொட்டித் தீர்த்தது |
39 | கொத்துக்கொத்து | போரில் கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்தனர் |
40 | கோடிகோடி | கோடி கோடியாகக் கொடுத்தாலும் குழந்தைகளுக்கு ஈடில்லை |
41 | சடைசடை | அந்தச் சாமியார் சடை சடையாக முடி வளர்த்தார் |
42 | சரம்சரம் | சரம் சரமாகப் பூக்கள் தொங்கின |
43 | சாரைசாரை | சாரை சாரையாக எறும்புகள் ஊறின |
44 | சிரித்துச் சிரித்து | சிரித்துச் சிரித்து வயிறு வலிக்கிறது |
45 | சிறிதுசிறிது | சிறுது சிறிதாகப் பணம் சேர்த்தாள் |
46 | சிறிய சிறிய | வெங்காயத்தை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டுங்கள் |
47 | சிறுக சிறுக | சிறுக சிறுக சேமித்த பணத்தில் வீடு கட்டினார் |
48 | சின்னச்சின்ன | சின்னச்சின்ன சண்டைகள் நடப்பது இயல்பானது |
49 | சுக்குச்சுக்கு | சுக்குச்சுக்காக உடைந்து போனது |
50 | சுடச்சுட | சுடச்சுட வடை சுட்டார் |
51 | சும்மாசும்மா | சும்மா சும்மா தொந்தரவு செய்யாதீர்கள் |
52 | சுருள்சுருள் | தலைமுடி ஏன் சுருள் சுருளாக இருக்கிறது |
53 | தனித்தனி | தனித்தனியான வீடுகள் விற்பனைக்கு உள்ளன. |
54 | துடிதுடித்த | குழந்தை கீழே விழுந்தால் தாய் துடிதுடித்தாள். |
55 | துண்டுத்துண்டு | துண்டுத் துண்டாகக் காய்கறிகளை வெட்டினார். |
56 | துளித்துளி | துளித் துளியாகச் சேர்த்த பணம் |
57 | தூள்தூள் | தூள்தூளாக உடைத்து நொறுக்கினார் |
58 | தெருத்தெரு | தெருத்தெருவாக அலைந்து விற்றார். |
59 | தேடித்தேடி | தன்னம்பிக்கை நுால்களை தேடித்தேடி வாசியுங்கள் |
60 | நினைத்து நினைத்து | அந்த நிகழ்வை நினைத்து நினைத்து பார்க்கிறேன் |
61 | நீண்ட நீண்ட | நீண்ட நீண்ட காலம் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் |
62 | படிப்படி | படிப்படியாகப் படித்து முன்னேற்றினார் |
63 | பயந்து பயந்து | பயந்து பயந்து வாழாமல் தயிரியமாக வாழுங்கள் |
64 | பாதிப்பாதி | பாதிப்பாதியாக உடைத்துக் கொடுத்தார் |
65 | பார்த்துப் பார்த்து | பார்த்துப் பார்த்து வளர்த்தார் |
66 | புதிதுபுதிது | புதிது புதிதாக ஏதாவது செய்வார் |
67 | புள்ளிப்புள்ளி | உடலில் புள்ளிப்புள்ளியாகத் தழும்புகள் ஏற்பட்டன |
68 | பெரிய பெரிய | பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்தவர் |
69 | பொடிப்பொடி | பொடிப்பொடியாக நொறுக்கினர் |
70 | மலைமலை | மலை மலையாக வேலை உள்ளது |
71 | முதல்முதல் | முதல் முதலில் நிலவிற்கு நாம் சென்றோம் |
72 | முத்துமுத்து | முத்து முத்தாக எழுதினர் |
73 | மெதுமெது | மெது மெதுவாக நடந்து சென்றார் |
74 | மெல்ல மெல்ல | அச்சிறுமி மெல்ல மெல்ல நடந்து வந்தாள் |
75 | வகைவகை | வகை வகையாகச் சமைத்திருந்தார் |
76 | வண்டிவண்டி | வண்டி வண்டியாகப் புகாரளிக்கப்பட்டன |
77 | வண்ண வண்ண | வண்ண வண்ண மீன்களை வாங்கி வந்தோம் |
78 | வழிவழி | தமிழர்களால் வழிவழியாக விளையாடப்படுகிறது |
79 | விடிய விடிய | விடிய விடிய திருவிழா நடந்தது |
80 | விதம்விதம் | விதம் விதமாகக் கதை சொல்கிறார் |
81 | விதவிதம் | வித விதமான துணிகள் உள்ளன |
82 | விழுந்து விழுந்து | விழுந்து விழுந்து சிரித்தார் |
83 | வீடுவீடு | வீடு வீடாக ஏறியிறங்கி விற்றார் |
84 | வீதிவீதி | வீதி வீதியாக அலைந்தோம் |
85 | வேகவேகம் | வேக வேகமாக நடந்தோம் |
86 | வேறுவேறு | வேறுவேறு நண்பர்கள் மூலம் உதவினோம் |
87 | பேந்தப்பேந்த | பேந்தப்பேந்த விழித்தான் |