| எண் | இரட்டைக்கிளவி | உதாரணம் |
|---|
| 1 | கசகச | கசகச என வியர்த்தது |
| 2 | கடகட | கடகட என சிரித்தான் |
| 3 | கடுகடு | சிலர் எப்போதும் கடுகடுவென இருப்பார்கள் |
| 4 | கடுகடுத்த | என் பேச்சைக் கேட்டதும் அவர் முகம் கடுகடுத்தது. |
| 5 | கணகண | மணிகள் கணகணவென ஒலிக்க |
| 6 | கணீர் கணீர் | வெண்கல குரலில் கணீர் கணீர் எனப் பாடினார் |
| 7 | கதகத | அது கதகதவென கொதித்தது |
| 8 | கபகப | கபகப என பசிக்க ஆரம்பித்தது |
| 9 | கமகம | கமகம என மணந்தது முல்லை |
| 10 | கரகர | கரகரவெனக் கழுத்தை அறுத்தார் |
| 11 | கரகரத்த | கரகரத்த குரலில் பேசினான் |
| 12 | கருகரு | அவன் தலைமுடி கருகருவென இருந்தது |
| 13 | கலகல | கலகலவெனச் சிரித்தாள் |
| 14 | கலகலத்த | கலகலப்பான பேச்சு |
| 15 | கறகற | மின்விசிறிகள் கறகற என சுழன்றன |
| 16 | கிசுகிசு | கிசுகிசு ஒன்றைக் கேட்டேன் |
| 17 | கிச்சுகிச்சு | கிச்சுகிச்சு மூட்டினாள் பேத்தி |
| 18 | கிடுகிடு | கிடுகிடு பள்ளம் பார்த்தேன் |
| 19 | கிளுகிளு | கிளுகிளு படம் பார்த்தாராம் அவள் கிளுகிளுவென சிரித்து |
| 20 | கிறுகிறு | கிறுகிறு என்று தலை சுற்றியது |
| 21 | கீச்சுகீச்சு | கீச்சுகீச்சு என குருவிகள் கத்தின |
| 22 | குசுகுசு | குறைந்த ஓசையில் குசுகுசுவென பேசிக்கொண்டே இருந்தார்கள் |
| 23 | குடுகுடு | குடுகுடு கிழவர் வந்தார் |
| 24 | குபுகுபு | குபுகுபு என குருதி கொட்டியது |
| 25 | குளுகுளு | குளுகுளுவென உதகை இருந்தது |
| 26 | குறுகுறு | குறுகுறுத்தது குற்ற நெஞ்சம் |
| 27 | கொழகொழ | கொழகொழ என்று ஆனது சோறு |
| 28 | கொழுகொழு | கொழுகொழு என்று குட்டி |
| 29 | சடசட | சடசடவென கிளை முறிந்தது |
| 30 | சதசத | சதசத என்ற சேற்றில் விழுந்தேன் |
| 31 | சரசர | சரசர என்று மான்கள் ஓடின |
| 32 | சலசல | பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது |
| 33 | சவசவ | சவசவ என்று முகம் சிவந்தது |
| 34 | சாரைசாரை | சாரைசாரையாக மக்கள் வந்தனர் |
| 35 | சிடுசிடு | சிடுசிடுவென முகத்தைக் கோபத்தோடு வைத்திருந்தார். |
| 36 | சிலுசிலு | சிலுசிலு எனக் காற்று வீசியது |
| 37 | சுறுசுறு | சுறுசுறுவெனக் கோபமாக பேசினார் |
| 38 | சொதசொத | சொதசொதவென மழையில் நனைந்து விட்டார் |
| 39 | சொரசொர | சொரசொரப்பான தாடி |
| 40 | டாங்டாங் | டாங் டாங்கென மணி ஒலித்தது |
| 41 | தகதக | தகதக மின்னும் மேனி |
| 42 | தடதட | தடதட என் கதவைத் தட்டினான் |
| 43 | தடதட | தடதடவென இழுத்துச் சென்றார் |
| 44 | தரதர | தரதர என்று இழுத்து சென்றான் |
| 45 | தழுதழுத்த | தழுதழுத்த குரலில் பேசினார் |
| 46 | தளதள | தளதள என்று ததும்பும் பருவம் |
| 47 | திக்குத்திக்கு | திக்குத்திக்கு என் நெஞ்சம் துடிக்கும் |
| 48 | திடுதிடு | திடுதிடு என நுழைந்தான் |
| 49 | திடுதிடுப் | கார்களில் திடுதிடுப்பென மர்ம கும்பல் ஒன்று வந்தது. |
| 50 | திபுதிபு | திபுதிபு என மக்கள் புகுந்தனர் |
| 51 | திருதிரு | திருதிரு என விழித்தான் |
| 52 | துடிதுடித்தல் | சோகச் செய்தி கேட்டுத் துடிதுடித்துப் போனோம் |
| 53 | துருதுரு | துரு துருவென ஏதாவது செய்து கொண்டிருப்பாள் |
| 54 | துறுதுறு | துறுதுறு என்ற விழிகள் |
| 55 | தைதை | தைதை என்று ஆடினாள் |
| 56 | தொணதொண | தொணதொணவெனப் பேசாமல் இருங்கள் |
| 57 | தொபுதொபு | தொபுதொபுவென்று மழை வெள்ளம் கொட்டியது |
| 58 | தொளதொள | தொள தொள என சட்டை அணிந்தார் |
| 59 | நங்குநங்கு | நங்குநங்கு எனக் குத்தினான் |
| 60 | நசநச | எங்கே பார்த்தாலும் நசநச என்று ஈரம் |
| 61 | நணுகுநணுகு | நணுகுநணுகு எனும் அளவில் அச்சம் மேலிட (இலக்கியம்) |
| 62 | நமநம | தொண்டை நமநமவென சளி பிடிப்பது போலிருக்கிறது |
| 63 | நறநற | நறநற என பல்லைக் கடித்தான் |
| 64 | நறு நறு | ஆத்திரத்துடன் பற்களை நறுநறுவென்று கடித்தாள் |
| 65 | நெடுநெடு | அவள் நெடுநெடுவென வளர்ந்து விட்டாள் |
| 66 | நெருநெரு | அரிசியை சற்று நெருநெருவென்று அரைக்கவும் |
| 67 | நைநை | நைநை என்று அழுதாள் |
| 68 | நொகுநொகு | நொகுநொகு (நெகுநெகு) என்று மாவை அரைத்தாள் |
| 69 | பகபக | வாய் விட்டு பகபகவென சிரித்தான் |
| 70 | பக்குப்பக்கு | பக்குப்பக்கு என்று நெஞ்சு அடிக்கும் |
| 71 | படபட | கண்ணகி படபடவெனப் பேசிச் சிரித்தான் |
| 72 | படபடத்த | பாம்பைப் பார்த்ததும் நெஞ்சம் படபடத்தது |
| 73 | பதைபதைத்த | கைக்குழந்தைகளுடன் பதைபதைத்த பாட்டி |
| 74 | பரபர | பரபரப்பு அடைந்தது ஊர் |
| 75 | பரபரப்பு | - |
| 76 | பளபள | பளபள என்று பாறை மின்னியது |
| 77 | பளபளத்த | கண்ணாடிபோல் பளபளத்த தரையில் |
| 78 | பளார் பளார் | பளார் பளாரென கன்னத்தில் அறைந்தார் |
| 79 | பளிச் | பளிச்செனப் பதில் சொன்னார் |
| 80 | பளிச்பளிச் | - |
| 81 | பளீர் | - |
| 82 | பிசுபிசு | எண்ணெய் பிசுபிசுவென இருந்தது |
| 83 | பிசுபிசுத்த | பிசுபிசுத்தது போராட்டம் |
| 84 | புசுபுசு | இட்லி புசுபுசுவென கிடைக்கும் |
| 85 | பொசுபொசு | - |
| 86 | பொதபொத | பொதபொத பன்றியின் வயிறு |
| 87 | பொலபொல | பொலபொல என வடித்தாள் கண்ணீர் |
| 88 | மங்குமங்கு | மங்குமங்கு (மாங்கு மாங்கு) என்று வேலை செய்தால் போதுமா? |
| 89 | மசமச | மசமச என்று நிற்கவில்லை |
| 90 | மடக்கு மடக்கு | மடக்கு மடக்கு எனவும் குடித்தார் |
| 91 | மடமட | மரம் மடமட என முறிந்தது மடமட என நீரைக் குடித்தார் |
| 92 | மலங்க மலங்க | மலங்க மலங்க விழித்தான் |
| 93 | மளமள | மள மள என எல்லாம் நிகழ்ந்தது; மளமளவெனப் பற்றி எரிந்ததீ |
| 94 | மாங்குமாங்கு | மாங்குமாங்கு என்று உழைப்பார் |
| 95 | மினுகு மினுகு | மினுகு மினுகு என்று செழிப்புற்றிருந்த மேனி (இலக்கியம்) |
| 96 | மினுமினு | - |
| 97 | முணுமுணுத்த | மனதிற்குள் முணுமுணுத்தார் |
| 98 | மூசுமூசு | - |
| 99 | மெது மெது | - |
| 100 | மொசுமொசு | மொசுமொசு என மயிர் |
| 101 | மொச்சுமொச்சு | மொச்சுமொச்சு என்று தின்றார் பாட்டன் |
| 102 | மொடமொட | - |
| 103 | மொர மொர | - |
| 104 | மொலுமொலு | மொலு மொலென்று அரிக்கிறது சிரங்கு |
| 105 | மொழுமொழு | மொழுமொழு என்று தலை வழுக்கை. |
| 106 | மொறமொற | - |
| 107 | மொறுமொறு | மொறுமொறு என்று சுட்டாள் முறுக்கு |
| 108 | லபக்கு லபக்கு | லபக்கு லபக்கென்று முழுங்கினார் |
| 109 | லபலப | லபலப என்று அடித்துக் கொண்டாள் |
| 110 | லபோலபோ | லபோலபோ என அடித்துக் கொண்டாள் |
| 111 | லொடலொட | லொடலொட என்றும் பேசுவாள் |
| 112 | வடவட | வடவட என வேர்த்தன கைகள் |
| 113 | வதவத | வதவத என ஈன்றன குட்டிகள் |
| 114 | வழவழ | வழவழ என்று பேசினாள் கிழவி |
| 115 | வளுவளு | - |
| 116 | விக்கி விக்கி | விக்கி விக்கி அழுதது குழந்தை |
| 117 | விசுக் விசுக் | பெண் ஒருவர் விசுக் விசுக்கென்று நடக்கிறார் |
| 118 | விசுவிசு | விசுவிசு என்று குளிர் அடித்தது |
| 119 | விடுவிடு | - |
| 120 | விண் விண் | ஒரே பக்கமாக தலை விண்விண்ணென்று தெறிக்கும் |
| 121 | விதிர்விதிர் | - |
| 122 | விறுவிறு | விறுவிறுப்பான கதையாம் |
| 123 | வெடவெட | வெடவெட என நடுங்கியது உடல் |
| 124 | வெடுவெடு | வெடுவெடு என நடுங்கினாள் |
| 125 | வெதுவெது | வெதுவெதுப்பான நீரில் குளித்தாள் |
| 126 | வெலவெல | வெலவெல என்று நடுங்கினேன். |
| 127 | ஜிகுஜிகு | ஜிகு ஜிகு உடையில் நாட்டியம் ஆடினார் |